ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது தெரிந்ததும் தெரியாதது பகுதி
பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- செல்வத்தை அளிக்கும் பைரவரை எப்படி அழைப்பர்?
- தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் ஸ்தலம் எது?
- பஞ்ச பூத ஸ்தலத்தில் பிருதிவி ஸ்தலம் எது?
- மதுரையில் சைவ சமயத்தை நிலைநாட்டிய சிவ பக்தை யார்?
- அறுபத்து மூவர் உற்சவத்திற்கு பெயர் பெற்ற இடம்?
- இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கான் என பொற்றியவர் யார்?
- பக்துனுக்காக விறகை சுமந்த சிவபெருமான் யார் ?
- சிவனின்.வாகனம் எது?
- சிவனை ஆடு பூஜித்த ஸ்தலம் எது?
- சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாக சொல்லுவார்?
- சிவபெருமான் அம்மா என்று யாரை அழைத்து மகிழ்ந்தார் ?
- தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார் யார்?
- ஸ்ரீ ருத்ரம் ஜபித்து சிவனை அடைந்த அடியார் யார்?
- ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
- அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் ஸ்தலம்?
- மதுரையில் சிவன் ஆடும் தாண்டவம் ?
- பார்வதியை தனது இடது பாகத்தில் ஏற்றபடி அருளும் ஸ்தலம்?
- தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன் யார் ?
- நக்கீரன் முக்தி பெற்ற ஸ்தலம் ?
- சிவபெருமானுக்கு பிடித்த வேதம்?
பதில்கள்:
- சொர்ண ஆகர்ஷண பைரவர்
- திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில்
- காஞ்சிபுரம்
- மங்கையர்க்கரசியார்
- மயிலை கபாலீஸ்வரர் கோவில்
- மாணிக்கவாசகர்
- மதுரை சொக்கநாதர்
- ரிஷபம் (காளை)
- திருவாடானை (இராமநாதபுரம் dt)
- மூன்று (3)
- காரைக்கால் அம்மையார்
- நமி நந்தி அடிகள் ( திருவாரூர்)
- ருத்ரபசுபதியார்
- சிருங்கேரி
- திருவானைக்காவல்
- சந்தியா தாண்டவம்
- திருச்செங்கோடு
- திருச்சி தாயுமானவர்
- காளஹஸ்தி
- சாம வேதம்