ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது தெரிந்ததும் தெரியாததும் பகுதி
இதன் பதில்கள் கீழே கொடுத்துள்ளோம்.
- மகாவிஷ்ணு யாரை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்தார்?
- அஷ்டாட்சர மந்திரம் என்பது எது?
- மூகாம்பிகை வதம் செய்த அசுரர் யார்?
- கௌசிக என்பவர் யார் ?
- திருநள்ளாறு குளத்தில் நீராடி சனீஸ்வரனை வழிபட்ட மன்னன்?
- திருவெம்பாவையில் உள்ள மொத்த பாடல் ?
- யம ராஜனின் தந்தை யார் ?
- அனுமனின் தாயின் பெயர் ?
- பதஞ்சலி முனிவர் யாருடைய அம்சம்?
- நாரதர் கையில் உள்ள இசைக்கருவி பெயர் என்ன?
- ஆழ்வார்களால் பாடப் பெற்ற திருத் தளங்களை எப்படி அழைப்பர்?
- குபேரனுக்கு உரிய திசை எது?
- திருப்பதி உற்சவரின் திருநாமம் என்ன?
- கந்தர் அனுபூதி பாடியவர் யார்?
- காளியோடு சிவன் சேர்ந்து நடனம் ஆடிய ஸ்தலம் எது ?
- ஸ்ரீ இராமனின் ஜன்ம நட்சத்திரம் எது?
- ஸ்ரீ இராமனின் வெடுவத் தோழன் யார்?
- இசைக்கு முக்கியமாக கருதும் ஸ்வரம் எத்தனை ?
- ஊமையாய் இருந்து முருகன் அருளால் பாடியவர் யார் ?
- பிள்ளையார் பட்டி விநாயகரின் பெயர் என்ன?
பதில்கள்:
- ஹிரண்யகசிபு
- ஓம் நமோ நாராயணா
- மூகாசுரன்
- விஸ்வாமித்திரர்
- நளன்
- 20 பாடல்கள்
- சூரியன்
- அஞ்சனை
- ஆதிசேஷன்
- மஹதி
- மங்களாசாசனம்
- வடக்கு
- மலையப்பசுவாமி
- அருணகிரிநாதர்
- திருவாலங்காடு
- புனர்பூசம்
- குகன்
- ஏழு 7
- குமரகுருபரர்
- கற்பக விநாயகர்.