ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நம்து சிந்தனைக்கு சில..
#1
கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களை ஜெபிப்பது மட்டுமே இறைவனை அடையும் சிறந்த வழியாகும். நாமங்களை ஜெபிப்பதற்கு குளிப்பது, பூஜை செய்வது போன்ற எந்த வரையறை எதுவும் தேவை இல்லை.
#2
பூஜை செய்தாலும், மந்திரங்களை ஜெபித்தாலும் இறைவனை நினைப்பது தான் முக்கியம்.இறைவன் நமக்கு துணை செய்கிறான் என்ற நம்பிக்கை மிகவும் தேவை. இதனால்,நாம் செய்யும் செயல்கள் சுலபமாகின்றன. மனதில் ஊக்கமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது.
#3
குழந்தைகளுக்கு இறைவனின் திருநாமங்களைப் பெயரிடுங்கள். பிள்ளைகளை அன்போடு கூப்பிடும்போது, நம்மையும் அறியாமல் நாமஜபம் செய்த புண்ணிய பலனைப் பெற்றவர்களாகி விடுவோம்.
#4
கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ
அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும்.அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே“ என்றார் அப்பர்.இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை “அவனருளாலேஅவன் தாள் வணங்கி“ என்கிறார் மாணிக்கவாசகர்.
#5
கடவைள நோக்கி மனதை திருப்புங்கள். அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.
பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ