முக்தி தரும் பகவன் நாமம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது  முக்தி தரும் பகவன் நாமம்

நாம எல்லாருமே வாழ்க்கையிலே  பலவிதமான பாவங்களை தினமும் செய்துகொண்டேதான் இருக்கோம். அதைப் போக்கிக்க என்ன பண்ணணும்?

பாவங்களை போக்கிக்கணும்னா, அதுக்கு பாகவதம் படிக்க வேண்டாம். சிவபுராணத்தைப் படிக்க வேண்டாம்;
இந்த ஸ்லோகம், அந்த ஸ்லோகம்னு ஸ்லோகங்களை எல்லாம் தேடி சொல்லிண்டு இருக்க வேண்டாம்.
பகவன் நாமத்தை பக்தி சிரத்தையா ஜபம் பண்ணாலே போதும். 

நமக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும். குறிப்பா, கருட புராணம் பத்தி எல்லாருக்குமே சந்தேகம்தான்.
மஹாளய பட்சம் சமயத்தில் கருட புராணத்தைப் படிக்கலாம்; தப்பில்லை.

எவ்வளவோ ஜபம் பண்ணி, தவம் பண்ணியும் நினைச்ச பலன் எதுவுமே கிடைக்கலியா?
மனசுல நிம்மதி வரலியா? கிருஷ்ணான்னு சொல்லுங்கோ போதும். நம்மால நல்லா சொல்ல முடியும். ஆனா, நாம சொல்றதில்ல.

நாராயணாங்கற நாமத்துலேர்ந்து ராவையும், நம சிவாய என்கிற நாமத்துலேர்ந்து மாவையும் சேர்த்து வந்ததுதான் ‘ராமா’ங்கற நாமம்.
இந்த ரெண்டு நாமாவுலேயும் இருக்குற மத்யமம் உருவாக்கியது தான் ராம நாமம்.
மத்யமம் போச்சுன்னா எல்லாமே போச்சு. மத்யமம் என்பது ரொம்ப விசேஷமான ஒரு விஷயம்.
ஸ்ருதில கூட அதுக்கு ஒரு தனி இடம் உண்டு.

நாம பல விஷயங்களை அர்த்தம் சரியா தெரியாமலேயே பேசிண்டு இருக்கோம். 
அந்தக் கால பெரியவா நமக்கு வெச்சிருக்குற பழக்க வழக்கத்தோட அருமை, பெருமைகளைப் பத்தியும் சரியா தெரிஞ்சுக்காமதான் போட்டு குழப்பிக்கறோம். மாசத்துல ரெண்டு நாளாவது குறைஞ்சது விரதம் இருக்கறது நல்லது.
நம்மால வருஷத்துல ரெண்டு நாள் விரதம் இருக்கறதே இப்பவெல்லாம் முடியாத காரியமா மாறி போச்சு.

சிராத்தத்தைக் கூட சிரத்தையா பண்ண மாட்டேங்கறா நிறைய பேரு.
சூரியன் உச்சத்துல வர்றதுக்கு முன்னாடி சிராத்த காரியங்களை நாம் முடிக்கக் கூடாது.
காலைல ஒன்பது மணிக்கெல்லாம் சிராத்தத்தை முடிச்சுட்டு ஆஃபீஸ் போறவா எத்தனையோ பேர் இருக்கா.  ‘

‘கலியுகத்துல பக்தியே பண்ண முடியலியே. உடம்பு வேற அதுக்கு ஒத்துழைக்கலைன்னு சொல்றவா நிறைய பேரு.
மனசு ஒன்றி பண்றதுதானே பக்தி? ஒன்பது விதமான பக்திகள்ல ஸ்ரவணத்தை பண்ணலாமே. 
மிகவும் சுலபம். காதால் பகவத் நாமாவை கேட்கலாமே.  கண்ணால் பகவானை பார்க்கலாம். 
நடந்தா உடம்பு சௌகரியம், மனசு சௌகரியம் எல்லாம் வருமா? வராது.
கோயில்களுக்கு போய் உட்காரணும். அங்க இருக்கற அதிர்வுகளை உள்வாங்கிக்கணும்.
பகவான் விடற மூச்சுக் காற்றை நாமும் உள்வாங்கிக்கணும். அப்போதான் மன நிம்மதி கிடைக்கும்.

கிரக கோளாறா? உங்க கிரகத்துல (வீட்டுல) கோளாறா? இந்தக் கோயிலுக்கு போயிட்டு வாங்கோ, அந்தக் கோயிலுக்கு போயிட்டு வாங்கோன்னு ஏன் சொல்றா? அங்க இருக்கக்கூடிய பகவான் முன்னாடி போய் அமைதியா உட்காரும்போது, பகவான் விடும் மூச்சுக் காற்றை நாமும் சுவாசித்தால் நமக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் அதுக்காக அப்படி  சொல்றா.

ராம ராம –  கிருஷ்ண கிருஷ்ண – சிவ சிவ – கோவிந்தா கோவிந்தான்னு அப்பப்போ பகவானை  கூப்பிடலாமே? அதுவே ஒரு மகா புண்ணியம் தானே?

கலியுகத்தில் இறைவனை அடைய சிறந்த வழி நாம் ஸ்மரனை தான் அதனாலே அந்த சுலப வழியை பின் பற்றி இறைவனை வழிபடுவோமாக !

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!

லோகா சமஸ்தா சகிநோ பவந்து .‌.

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: