இன்று நாம் காணப்போவது புருஷ ஸுக்தத்தின் சிறிய விளக்கமும் பயனும்.
ஸஹஸ்ர சீர்ஷா புருஷ : ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்! ஸ
பூமிம் விஸ்வதோ வ்ருத்வா! அத்ய திஷ்டத் தசாம் குலம்!
என தொடங்கும் இந்த புருஷ ஸூக்தம் பிரபஞ்சத்தின்
படைப்புக்கு ஆதாரமான பரம புருஷனை போற்றுகிறது. ஆயிரம் தலைகள் கொண்ட பரம புருஷனாக ஆயிரம் கண்களும், ஆயிரம் பாதங்கள் கொண்ட அவர் இப் பிரபஞ்சத்தில் அளவிளமுடியாத படி வியாபித்து இருக்கிறான்.
புருஷ ஸூக்தம் நோக்கம் : பிரபஞ்சத்தின் ஆன்மீக ஐக்கியத்தை விளக்குவதேயாகும்.
இந்த ஸூக்தம் பரம புருஷனை போற்றியும் பின்னர்
பிரபஞ்சம் படைக்கப்பட்ட விதத்தையும் இது விளக்குகிறது.
வேத மந்திரங்களுள் கருத்துச்செறிவிலும், மந்திர ஆற்றலிலும், மங்கலத்தைச் சேர்ப்பதிலும் மிக முக்கியமான ஒன்று இந்தச் சூக்தம். இறைவனின் மகிமையைப் பாடுவதில் ஆரம்பித்து, இறைவனின் தியாகத்தால் இந்த உலகமும் உயிர்களும் தோன்றியதைப் பேசி, பிறகு உயிர் இறைவனை அடைவதுதான் அஞ்ஞான இருளைக் கடக்கும் ஒரே வழி என்பதைக்கூறி, அதற்கான காரணத்தையும் அந்த வழியையும் விளக்குகிறது,
இவ் ஸூக்தத்தில் 24 சரணங்கள். அதில் 18 வரை பூர்வநாராயணம் என்றும் மீதியை உத்தரநாராயணம் என்றும் கூறப்படும்.
நாணத்தின் தலைவி ஹ்ரீ தேவியும் செல்வத்தின் தலைவி ஸ்ரீ தேவியும் அவரது மனைவியர் களாகவும்
பகலும் இரவும் அவனது பக்கங்களாகவும் நக்ஷத்திரங்கள் அவன் திருஉருவமாகவும் உள்ளனர்!
இஷ்ட்டம் மனிஷணா ! அமும் மனிஷாண ! சர்வம் மனிஷணா !!
ஓ ! பரம் பொருளே !
நான் விரும்பியதை கொடுத்தருள்வாய் !
இவ் உலக இன்பத்தை தந்தருள்வாய்
இகத்திலும் பரத்திலும் எல்லா நலன்களும் தந்தருள்வாய்…..
இந்த ஸூக்தம் எல்லா வேத பராயணத்திலும் , நமது சமய சடங்குகளிலும், மற்றும் வேள்வி களிலும் பயன் படுத்த படுகிறது.
மேலும் விஷ்ணு ஆலயத்தில் முக்கியமான வேதமாக
பாராயணம் செய்ய படுகிறது.
முக்கியமாக இதனை பாராயணம் செய்து வந்தால் சர்க்கரை வியாதி, நீண்ட நாள் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு நல்ல பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள்.
எல்லோரும் எல்லா இடத்திலேயும் பாராயணம் செய்ய கூடிய இதனை நாமும் சிரத்தயுடன் ஜபித்து வாழ்க்கையில் நலம் பெறுவோமாக……
நீங்கள் இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களும் பயன் பெற செய்யுங்கள்.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து…….
….. ஸ்ரீ