மஹாளய பக்ஷம்

மஹாளய பக்ஷம்


ஹிந்து சமயப்படி பகவானிடம் பக்தி ஒவ்வொரு மனிதனுக்கு எவ்வளவு
தேவையோ அதைவிட குறைவில்லாமல் தேவதைகளையும், பித்ருக்களையும் திருப்தி செய்விக்கும்  கர்மாக்களை  சிரத்தையுடன்  செய்ய வேண்டும் என்று அறநூல்கள்
கூறுகின்றன.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் மூன்று கடன்கள்
உள்ளதாக அறநூல்கள் கூறுகின்றன. தேவதைகளுக்கு செய்ய வேண்டிய
கடமைகளான ஹோமங்கள், பூஜைகள், ஸ்தோத்திர பாடல்கள் என சில இருக்கின்றன.

நவக்ரஹ தேவதைகளை பூஜை செய்கிறோம். ஹோமமும் செய்கிறோம்.

அதுபோல் இந்திரன் முதலிய பத்து திக் பாலகர்களையும் பூஜை செய்ய வேண்டும்.
இதன் மூலம் தேவதைகளுடைய கடன்களிலிருந்து விடுபட்டு அவர்கள் அருள் பெற்றவர்களாக ஆகிறோம்.
அதுபோல் ரிஷிகளின் கடன்களிலிருந்து விடுபட்டு
அவர்களுடைய கடன் இல்லாதவர்களாக ஆகிறோம்.

அதுபோல் விஸ்வே தேவர்கள் போன்ற பித்ரு தேவதைகள் இருக்கின்றார்கள்,
நம்முடைய முன்னோர்கள்.
எந்த பிறவியை அடைந்திருந்தாலும் அந்தந்த பிறவியிலேயே, அந்த
நிலையிலேயே அவர்களுக்கு வேண்டிய சுகங்களை,  விச்வே
தேவர்கள்தான் நாம் செய்த தர்ப்பணம், ச்ரார்த்தம் முதலிய பயனை அவர்களுக்கு
அளிக்கிறார்கள்.

ஆகவே ஒவ்வொரு அமாவாசை மாதப்பிறப்பு மற்றும் சில பர்வ காலங்கள், தக்ஷிணாயணம், உத்திராயணம், இறந்தவர்களின் தினம் போன்றவைகளில்

தர்ப்பணம் செய்வது, கை, கால் அலம்பி தக்ஷணை கொடுப்பது (ஹிரண்யச்ரார்த்தம்) அன்ன ச்ரார்த்தம் என மூன்று வகைகளில் பித்ருக்களுக்கு திருப்தி
செய்விக்க வேண்டும். அதன் மூலம் பித்ருக்களின் கடன்களிலிருந்து விடுபட்டு
பித்ரு தேவதைகளின் அருளைப் பெறுகிறோம்.

மஹாளய பக்ஷம் என்ற ச்ராவண மாத கடைசியில் பௌர்ணமி  முடிந்து வரும் அந்த பதினைந்து தினங்களும் மஹாளய பக்ஷம் எனப்படும்.

மஹாளய பட்சம் என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்றுபொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வே தேவாதி தேவதைகள் பித்ரு
லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை
ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.

அகவே அந்த மஹாளய பட்ச காலத்தில் அவசியம்
பித்ரு தேவதைகளுக்க தர்ப்பணம், ஹிரண்ய ச்ரார்த்ம், அன்ன ச்ரார்த்தம்
இம்மூன்றுக்கள் எதையேனும் ஒன்றை விடாமல் செய்ய வேண்டும்.

சன்யாசிகளான இறந்தவர்களுக்குகூட யதிமாளையம் என்று ஒரு நாள்
வரும். ஆகவே அந்த நாளில் யதிகளுக்கு பிராமண போஜனம் செய்விக்க
வேண்டும். ஜலம், எள்ளு, அட்சதை முதலியவைகளை எல்லாம் கலந்து பித்ரு தேவதைகளை குறித்து விடவதே தர்ப்பணம்.

நாம் ஜலம் விடுவதன் மூலம்
தேவதைகளக்கு சென்று அவர்கள் மூலமாக நம்முடைய முன்னோர்களுக்கும்
அவர்களக்கு வேண்டிய திருப்தியை அளிக்கும்.

சிரத்தையோடு, விசவாசத்தோடு பித்ருக்களுக்கு செய்ய
வேண்டியிருப்பதனாலும் ச்ரார்த்தம் என்று பெயர். தட்சிணை மூலமாகவும்,பொருள் மூலமாகவும் கொடுப்பதனால் ஹிரண்ய ச்ரார்த்தம் என்று
சொல்லப்படுகிறது. ஹிரண்யம் என்றால் தங்கம். தங்க நாணயத்தை தட்சிணையாக
கொடுப்பது அந்த காலத்து வழக்கம். ஆகவே மனிதனாய்ப் பிறந்த

ஒவ்வொருவரும் தேவ, , பித்ரு கடன்களிலிருந்து விடுபடுவதற்கு, முன்று
பேர்களுக்கும் உள்ள உரிய கர்மாக்களை செய்ய வேண்டும். அதிலும் பித்ரு

தேவதைகளின் அனுக்ரஹம் மிகவும் முக்கியமானதால் பித்ரு காலங்களிலும்,
பித்ரு தோஷங்களிலிருந்தும் விடுபெறுவதற்கு அவசியம் தர்ப்பணம், ச்ரார்த்தம்
போன்றவைகளை மஹாளய பட்சத்தில் செய்ய வேண்டும்.

பித்ரு லோகத்தில் இருக்கும், நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணம், அமாவாசை படையல்களை நமது முன்னோர்கள் நேரில் வந்து பெற இயலாது. பித்ரு லோகத்தை விட்டு வெளியே வர நமது முன்னோர்களுக்கு அனுமதி இல்லை. நாம் செய்யும் தர்ப்பணம், அமாவாசை படையல்களை பித்ரு தேவன் பெற்றுக்கொண்டு அதை நமது முன்னோர்களிடம் சேர்ப்பார்.

மஹாளய அமாவாசை உட்பட மஹாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து நமது வீட்டிற்க்கோ அல்லது அவர்கள் இஷ்டப்படும் இடத்திற்கோ சென்று வர அனுமதி உண்டு.

இந்த 15 நாட்களும் நமது முன்னோர்களை நமது வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு விருப்பமானதை படைத்து வழிபட்டால் நமக்கு பித்ரு சாபம் ஏதும் இருந்தால் விலகும். நமது முன்னோர்களின் ஆசீர்வாதமும், முழு பாதுகாப்பும் கிடைக்கும். நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……… ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: