வடபழனி ஆண்டவர் கோவில் சிறப்பு :

நாம் தெரிந்து கொள்ளப் போவது ஆலயத்தின் சிறப்பு :

மூன்று சாதுக்களின் பக்தியினால்
கட்டப் பட்டு பூஜிக்கப்பட்ட இந்த வடபழனி ஆலய சிறப்பினை பார்ப்போம்.

சுவாமி : வடபழனி ஆண்டவர்
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : திருக்குளம்
தலவிருட்சம் : அத்தி மரம்

தலச்சிறப்பு : இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது மற்றும் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு. சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இவ்வாறு பாத ரட்சையுடன் சுவாமி இருப்பது வேறு எங்கும் இல்லாத விசேஷமான ஒன்று.

இந்த ஆலயத்தில் உள்ள வடபழனி ஆண்டவரை ஸ்த்ரீ புருஷ ரூபம் என்றும் கூறுவர். பெண்ணின் நளினமான இடையினையும், மென்மையும் கொண்டும், புருஷ லட்சணம் பொருந்தி இருப்பதால் அவ்வாறு கூறுவர்.

நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்று ஒரு தனிச் சன்னதி இருக்கிறது. மேலும் இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளது.

இக் கோவிலில் பல தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகிறது. வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள் இங்கு உள்ளது.

பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சினேயர் சன்னதிஇங்கு உண்டு.

இந்த கோவிலில் தினமும் உஷக்கால பூஜை விடியற்காலை 5 மணிவாக்கில் நடைபெறும். அந்த பூஜைக்கு பக்தர்கள் வருவது ஒரு விசேஷம். பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் கூட வந்து கலந்துகொள்வார்கள்.

காலை 7 மணிக்கு தினசரி ஆண்டவருக்கு பால் அபிஷேகம் விசேஷமாக நடைபெறும். நிறைய உபயதாரர்கள் இதில் கலந்து கொள்வர்.

வடபழனி ஆண்டவர் பின்புறம் நாக சுப்ரமணியர் என்று சன்னதியும் உள்ளது. இங்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது உண்டு..

பொன்னால் ஆன ஷண்முக சன்னதியில் பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதமாக கொடுப்பது மிகவும் விசேஷம்.

இந்த ஆண்டவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் பார்க்க கண்கொள்ளா காட்சி.

மேலும் இங்குள்ள தங்க தேர் தினமும் பக்தர்கள் வேண்டுதலால்
உலா வருவது மிகவும் சிறப்பு. நிறைய உபயதார்கள் வருவார்கள்.

இந்த கோவிலின் முன்புற இராஜ கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளது.

இக் கோவிலின் முன்புறம் திருக்குளம் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் ‘தெப்போற்சவம்’ நடைபெறுகிறது.

இதன் கிழக்கு கோபுரம் 40.8.மீ உயரம் கொண்டது. இதில் 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகிறது. இக் கோவிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

இங்கு தமிழ் மாதம் பன்னிரெண்டிலும் விழாக்கள் நடைபெறுகிறது. அவற்றுள் வைகாசி விசாகத் திருவிழா 11நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா சூர சம்காரத்துடன் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆறு நாட்களிலும் முருகப் பெருமானுக்கு “லட்சார்ச்சனை” நடைபெறுகிறது. மேலும் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகருக்கு 9 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தில் பசு மடம் ஒன்றும் பராமரிக்க படுகின்றது.

திருமணம் நடைபெறும் வகையில்
கோவிலில் மண்டபம் அமைந்துள்ளது.ஒரே நேரத்தில் நிறைய திருமணங்கள் நடைபெறும்.

தென் பழனி சென்று வர முடியாதவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றி
வருகிறார்கள்.

நாளுக்கு நாள் இந்த ஸ்தலத்தின் மகிமையும் புகழும் பெருக பெருக வடபழனி ஆண்டவர் திருக்கோவில் முருகனின் முக்கிய கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஸ்கந்த குரு கவசம் பாடல் வரிகள்:

வடபழனி ஆண்டவனே வல்வினையை போக்கிடுவீர்..

ஏழுமலை ஆண்டவனே எத்திசையும் காத்திடுவீர்…

ஏழ்மை அகற்றி கந்தா… எம பயம் போக்கிடுவீர்…..

அசையாத நெஞ்சத்துள் அறிவாக நீ அருள்வாய்…….

ஆறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்

பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன்
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே……. !!
என பாடி வடபழனி ஆண்டவன் பாதம் பணிவோம்.

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..
……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: