கண்டவர் விண்டிலர்.

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : –

கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம்

கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – இதன் பொருள் என்ன?

இந்த பரிபாஷயினை சிலர் இறைவனை கண்டவர்கள் பேச மாட்டார்கள் , பேசுபவர்கள் காண மாட்டார்கள் என்பர்.

இது மிக தவறானது. இறைவனை கண்ணுற்றவர்கள் பேசமாட்டார்கள் எணின் எப்படி திருமூலர், வள்ளலார் போன்றவர்கள் இறைவனை பற்றி பாடல்கள் இயற்றி , இறைவனை அடையும் வழிகளை பற்றி மக்களிடம் கூறினர்!

இறைவனை கண்ட ஞானிகள் திருவருட்பா , திருமந்திரம் , திருவாசகம், திவ்யபிரபந்தம் படைத்து தங்கள் கண்ட இறைவனை பற்றியும் , அடைந்த அனுபவங்களையும் அனைவரும் அறிய பாடல்களாக படைத்தனர்.

இதனால் மேற் கூரிய பொருள் சரியானது அல்ல? இதன் உண்மை பொருள் எது ?

அதாவது – “கண்டவர் விண்டிலர்” – காண்பது நம் கண்கள் அது பேசாது. “விண்டவர் கண்டிலர்” – பேசுவது நம் வாய் அது காணாது. மிக எளிய நேரடியான உண்மை பொருள் இதுவே. சிறிது சிந்தனை செய்தால் அறியலாம்.

அதாவது இறைவனை கண்ட கண்களால் “இறைவனை கண்டேன்” என்று கூற இயலாது.

“இறைவனை கண்டேன்” என்று கூறும் வாயால் இறைவனை காண இயலாது.

நம்மை சிந்திக்க செய்யவே சித்தர்கள் பரிபாசையாக பலவற்றை கூறி வைத்தனர்.

இப்படியான பல் வேறு விஷயங்களை தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

……… ஸ்ரீ


சிந்தனைக்கு :

சிறந்தவனாக இரு, சிறந்ததைவைத்திரு, சிறந்ததை செய்.

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்,

  • ஏழ்மையிலும் நேர்மை.

  • கோபத்திலும் பொறுமை.

  • தோல்வியிலும் விடாமுயற்சி.

  • வறுமையிலும் உதவி செய்யும் மனம்.

  • துன்பத்திலும் துணிவு.

  • செல்வத்திலும் எளிமை.

  • பதவியிலும் பணிவு.


2 thoughts on “கண்டவர் விண்டிலர்.”

  1. அருமையான சிந்தனை… நன்றி ஐயா. கண்டவர்… கண்களால் காணக்கூடிய ஒன்று இல்லை. மெய் கண்… அதாவது பார்வை கண்டு மெய்யில் உணர்ந்து ஞான தெளிதலே … கண்டவர் என்பதன் பொருள் என கருதுகிறேன். அவ்வாறு பெற்ற ஞானத்தை உபதேசம் செய்ய இயலும். ஆனால் அதன் எல்லை விவரிக்க இயலாத ஒன்று. தன்னுள் ஐக்யமாதல். ஐயா திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ள அனுபவ மொழிக்கு அகராதி ஏது… கடலின் ஆழம் போல் அவரவர் கடக்கும் தூரம் தெளிதல் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். எனில் வார்த்தை வார்ப்புரு யாவும் தத்தம் தெளிதல் தன்மைக்கு ஏற்ப பொருள் தரும்…அனைத்தும். முடிவில்லா ஒன்று என்பதை குறிக்கவே விண்டிலர் என குறிப்பிடப்பட்டுள்ளது என கருதுகிறேன். விண்டவர்… இப்படி தான் என்று அறுதியிட்டு சொல்வது என்பது ஏற்கனவே கூறியது போல அவரவர் தெளிதல் மட்டுமே. அறுதி என்பதே இல்லாத ஒன்றை கூறுவது என்பது கடல் ஆழம் அளப்பது போன்றது… என கருதுகிறேன். சிந்தனை துளிகள்.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: