கலியுகம் பற்றி கிருஷ்ணர் கூறியது

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது:

கலியுகம் பற்றி கிருஷ்ணர் கூறும் விளக்கம்.

கிருஷ்ணனின் உற்ற நண்பனும், தேரோட்டியுமான உத்தவர், கிருஷ்ணனை நோக்கி துவாபர யுகமே இப்படி இருப்பதால் வரும் கலியுகம் எப்படி இருக்கும் என கேட்டார்.

இதையே தான் பாண்டவர் நால்வரும் கேட்டனர். அதற்கு நான் சொன்ன விளக்கத்தை கூறுகிறேன் கேள் என்றார் கிருஷ்ணர்.

பாண்டவர் நால்வரும் கிருஷ்ணனிடம் கலியுகம் எப்படி இருக்கும் என அறிய ஆவலாக இருப்பதால் அதை பற்றி கூறவும் என கேட்டனர்.

கிருஷ்ணன் புன்னகையுடன், அதை நீங்களே உணரும் படி செய்கிறேன் என்று நான்கு அம்புகளை எடுத்தான். அதனை நான்கு திசைகளில் தனி தனியாக செலுத்தினான். இப்போது நால்வரையும் அழைத்து நான்கு அம்புகளையும் வீழ்ந்த இடத்தை கண்டு எடுத்து வர சொன்னான். உடனே நால்வரும் அம்பை எடுத்துவர கிளம்பினார்.

முதலில் பீமன் செல்ல அங்கு அம்பு வீழ்ந்த இடத்தை கண்டான். அங்கு ஒரு பெரிய கிணறும் அதை சுற்றி நான்கு கிணறும் தென்பட்டது. அதில் மத்தியில் இருந்த கிணறு வற்றியும், சுற்றி இருந்த நான்கு கிணறும் முழு தண்ணீருடன் காணப்பட்டது. அது எப்படி என குழம்பிய படி அம்பை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனை நோக்கி திரும்பி வருகிறான்.

அடுத்து அர்ச்சுனன் அம்பு வீழ்ந்த இடத்தில் ஒரு காட்சியை பார்கிறான். அங்கு ஒரு குயில் மிகவும் இனிமையாக கூவியது. மறுபக்கம் குயில் ஒன்று வென் முயலை கொடூரமாக கொன்று குத்திக்கொண்டு இருந்தது. திகைத்த அர்ஜுனன் இனிமையான ஓசை கொண்ட குயிலுக்கு இப்படி கொடூரமான குணமா ? என குழம்பி அம்புடன் கிருஷ்ணனை நோக்கி வருகிறான்.

அடுத்து சகாதேவன் அம்பு வீழ்ந்த இடம் சென்றான். அங்கு ஒரு பசு தனது கன்றை ஈன்றெடுத்த பின் தனது நாவால் நக்கி சுத்தம் செய்துகொண்டு இருந்ததது. சுத்தமான பின் அங்கிருந்தவர்கள் கன்றை பசு விடமிருந்த்து பிரிக்க, பசு கன்றை இழுத்து நக்க அதனால் கன்றுக்கு காயங்கள் ஏற்பட்டது. தாய் பசு தன் கன்றை எப்படி காயப்படுத்தும் என்று குழம்பி அம்பை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனை நோக்கி வருகிறான்.

அடுத்து நகுலன் மலையின் உச்சியில் அம்பு இருப்பதை கண்டு எடுக்க செல்ல அப்போது ஒரு பெரிய பாறை வேகமாக உருண்டு வந்தது. வரும்போது மரங்களின் மோதி கீழே தள்ளிவிட்டு வந்த பாறை ஒரு சிறு செடியின் மீது மோதி நின்றது. ஒரு சிறு செடியின் மீது மோதி நின்றதை பார்த்து ஆச்சர்யப்பட, அவனும் அம்பை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனை நோக்கி வருகிறான்.

பாண்டவர்கள் நால்வரும் வந்து கிருஷ்ணனிடம் தாங்கள் கண்ட காட்சியை சொல்லி தங்களுக்கு ஏற்ப்பட்ட சந்தேகத்தினை கேட்டனர். கிருஷ்ணர் புன்சிரிப்புடன் ஒவ்வருவரும் கண்ட காட்சியினை பற்றி கூறலானார்.

முதலில் அர்ச்சுனன் கண்ட காட்சி யை விளக்கினார். : அர்ஜுனா நீ கண்ட இனிமையான குரலை கொண்ட குயிலை போல கலியுகத்தில் இனிமையாக பேசும் இயல்பயும், அகண்ட அறிவு கொண்ட போலி குருமார்களும், ஆசிரியர்களும் இருப்பார்கள்.ஆனால் அவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள் என்றார். கள்வர்கள் அதிகரிப்பர். அதர்மம் தலைதூக்கும்.

அடுத்து பீமன் சந்தேகம் : பீமா , கலியுகத்தில் மிகுதியாக செல்வத்தை கொண்ட செல்வந்தர்கள் வாழ்வார்கள். அவர்களுக்கு மத்தியில் ஏழைகளும் வாழ்வார்கள்.செல்வத்தை சேர்ப்பதிலே குறியாய் இருக்கும் அவர்கள் சிறு பகுதியை கூட ஏழைக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். அவர்கள் தவறான வழிகளில் செல்வத்தை சேர்ப்பார்கள். ஏழை ஏழையாகவே இருப்பான்.இதுவே நீ கண்ட கிணற்று காட்சி.. என்றார்.

அடுத்து சகாதேவனுக்கு விளக்கமளிக்கிறார் : சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கண்மூடி த்தனமான பாசத்தோடு இருப்பார்கள். அதீதமான பாசத்தால் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தாலும் அதனை பொருட் படுத்தாமல் தங்கள் பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்க்கைக்கு தாங்களே பொருப்பாவார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள். அதைதான் அந்த பசுவின் செயல் உணர்த்தியது.

அடுத்து நகுலன் சந்தேகத்தின் விளக்கம் : நகுலா ! கலியுகத்தில் மக்கள் சான்றோர் களின் அறிவுரைகளை கேட்க்காமல் நெறி தவறி வாழ்வார்கள். அவர்களுக்கு யார் நன்மை கூறினாலும் ஏற்கமாட்டார்கள். பெண்களும் நெறி தவறி வாழ்வர். இவ்வாறு கட்டுப்பாடு இல்லாமல் நெறி தவறி ஓடுபவர்களை கட்டுபடுத்த இறை சக்தியால் மட்டுமே சாத்தியப்படும். அதை தான் அந்த சிறு செடி , அந்த பாறையினை நிறுத்தியது. அது தான் பாறை உணர்த்தியது என்று கூறினார்.

இப்படியாக கலியுகத்தில் மக்கள் எப்படி இருப்பார்கள், கலியுகம் எப்படி இருக்கும் என்பதனை கிருஷ்ணன் கூறினார்.

நினைத்து பாருங்கள் கிருஷ்ணன் அன்று சொன்னது போலதான் இன்றைய உலகம் இருக்கிறது. இதிலிருந்து மீள ஒரே வழி இறைவன் திருவடிகளை பற்றுவதே…..

கிருஷ்ண! கிருஷ்ணா! கிருஷ்ணா!!

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து

……….ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: