பிரதோஷ வழிபாடு

பிரதோஷம் ஏற்பட்ட விதம்:

தேவேந்திரன் தனது வாகனத்தில் ஊர்வலமாக வந்துகொண்டிருக்க எதிரே துர்வாச முனிவர் வந்தார்.

எப்போதும் பிடி சாபம் என கூறும் அவர் தேவேந்த்ரரை பார்த்து அன்போடு ஒரு மாலையை கொடுத்து வாழ்த்த, தேவேந்திரன் அந்த மாலையை அலட்சியமாக யானை தலையில் வைக்க, யானை மாலையை காலில் போட்டு மிதித்தது.

அதை கண்ட துர்வாசர் , உனக்கு அவ்வளவு ஆனவமா? அதற்கு காரணமான அனைத்து செல்வங்களையும் இழக்க கடவாய் என சாபமிட்டார். அந்த சாபம் உடனே பலித்தது. செல்வங்களை இழந்தான்.

பாற்கடலை கடைந்தால்தான் இழந்த செல்வத்தினை மீண்டும் பெற முடியும் என்ற நிலையில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முடிவு செய்தனர்.

மந்திர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிராக்கி,வாசுகியின் தலைப்பகுதியை அசுரர்களும் வால் பகுதியை தேவர்களும் கடைந்தனர். சோதனை போல் மந்திர மலை கடலில் மூழ்க, மஹாவிஷ்ணு கூர்மாவதராம் எடுத்து தாங்கி நிற்க விபரீதமாக ஆலகால விஷம் எழும்பியது.

அதன் கடுமையை தாங்காத அனைவரும் சிவபெருமானை வணங்கினர். எங்களை காக்க வேண்டும் என வேண்டினர்.

தேவர்களை காக்க விஷத்தை உண்டார் சிவன். அகில உலகும் இவருள் இருப்பதால் ஜீவராசிகள் துன்பபடாமல் இருக்க கருணை உள்ளம் கொண்ட அம்பிகை சிவபெருமான் கழுத்தை தடவ விஷம் அங்கேயே நின்றது.

அனைவரது கலக்கமும் நீங்க பெற்று, அவர்கள் மகிழ்ச்சி அடையும் படி ரிஷபத்தின் கொம்பு களின் நடுவில் நடனம் ஆடினார்.

இவ்வாறு அருள் செய்த நேரமே ‘பிரதோஷ வேளை’ எனப்படுகிறது. இவ்வாறு அருள்புரிந்த நேரம் மாலை நேரம் 4.30 – 6.00 மணிவரை. இது நடந்த நாள் சனிக்கிழமை என்பதால் சனிப்ரதோஷம் சிறப்பானதாக கூறப்படுகிறது.

பிரதோஷங்கள் 5 வகை:

நித்ய பிரதோஷம் : தினமும் சூரியன் மறையும் முன் ஒன்றரை மணியிலிருந்து நக்ஷத்திரம் தோன்றும் காலம் வரை.

  • பக்ஷ பிரதோஷம் : வளர்பிறை த்ரியோதசியில் வருவது.
  • மாத பிரதோஷம் : தேய் பிறை திரியோதசியில் வருவது.
  • மஹா பிரதோஷம் : சனிக்கிழமையில் வரும் பிரதோஷம்.
  • பிரலய பிரதோஷம் : உலகம் முடிவில் உண்டாகும் காலமே.

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை:
முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!

இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’.


ஆலயங்களில் பிரதோஷ வேளையில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் மூன்று முறை வலம் வருவார். முதல் சுற்றில் வேத பாரயணமும் இரண்டாம் சுற்றில் திருமுறை பாராயணமும் மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இசையுடன் வலம் வருவார்.

பிரதோஷ காலத்தில் முறைப்படி வழிபட்டால், வியாதி, கடன்,.அகால மரணம், வறுமை முதலியன நீங்கி முக்தி கிடைக்கும்.

பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால்

இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ

அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்

மறவா திருமனமே அது காண்நெல் மருந்தெனக்கே ……

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவுலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் .

‘ நம சிவாய வாழ்க ‘

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து……

……. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: