ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: தெரிந்ததும் தெரியாததும் பகுதி
இன்றைய கேள்விகளுக்கான பதில்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
- கற்களையே மலராக சிவலிங்கத்தின் மீது எரிந்து வழிபட்ட நாயன்மார்?
- எந்த ஊரில் பிறந்தால் முக்தி என்பார்கள்?
- சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேதாகமங்களின் ரகசியத்தை உபதேசம் செய்த ஸ்தலம்?
- தசாவதாரத்தில் ராம நாமம் கொண்ட அவதாரங்கள்?
- திதியையும் விதியையும் மாற்றிய திருத்தலம் எது?
- திரிவேணி சங்கமம் என்றால் என்ன?
- ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பிறந்த ஊர்?
- விஸ்வ லிங்கம் ராமேஸ்வரத்தில் யாரால் ஸ்தாபிக்கப் பட்டது?
- சிவனின் 5 சபைகள் எது?
- கோவில் அண்ணன் என்று ஆண்டாளால் பெயர் சூட்டப் பட்டவர்?
- தேவர்களுக்கு உத்தராயணம் என்பது எந்த பொழுது (காலம்)
- கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் தமிழ் மாதம்?
- ஐயப்பனின் இயற் பெயர் என்ன?
- முருகன் சிவனை வழி பட்ட ஸ்தலம்?
- நலம் தரும் நாமம் எது?
- 108 வது திவ்ய தேசம் எது?
- பெரியாழ்வார் ஆண்டாளை குழந்தை யாக கண்டெடுத்த இடம்?
- சாரதிக்குரிய மீசையுடன் காட்சி கொடுக்கும் பெருமாள் ஸ்தலம்?
- காசியில் உள்ள மற்றொரு அம்பிகையின் பெயர் (விசாலாட்சி தவிர)
- அஷ்ட லக்ஷ்மியில் முதல் லக்ஷ்மி யார்?
……………………………………………
பதில்கள்:
- சாக்கிய நாயனார்
- திருவாரூர்
- உத்தர கோச மங்கை
- பரசுராமர், இராமர், பலராமர்
- திருக்கடையூர்
- கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் சேருமிடம்.
- திருமீயச்சூர்
- ஆஞ்சநேயர்
கனக சபை, இரத்தினசபை, வெள்ளிசபை, தாமிரசபை, சித்திர சபை.
- இராமானுஜர்
- பகல் பொழுது.
- ஐப்பசி
- தர்மசாஸ்தா
- குமரக் கோட்டம்
- நாராயணா
- பரமபதம்
- துளசி செடி
- திருவல்லிக்கேணி
- அன்னபூரணி
- ஆதிலட்சுமி