ஸ்ரீமத் நாராயணீயம் ( பகுதி 1 )

இன்று நாம் காணவிருப்பது
” ஸ்ரீமத் நாராயணீயம் “.

ஆன்மீக பக்த்தர்களுக்கு ஓர் வேண்டுகோள் : இந்த நாராயணீய பகுதியை நிதானமாகவும், ஆழ்ந்து படித்தால் மட்டுமே இதன் மகத்துவம் புரியும், இதனை படிக்க உங்களுக்கும் ஆர்வம் வரும். உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்.

” ஸ்ரீமத் நாராயணீயம் ”

ஸ்ரீமத் பாகவதத்தை போல மிக சிறந்த காவியம் ஸ்ரீமத் நாராயணீயம். சொல்லப்போனால் இது பாகவத புராணத்தின் சுருக்கம்.

பாகவதம் சுமார் 18000 ஸ்லோகங்களை கொண்டது. பாகவத்துக்கு இணையாக மொத்தம் 1035 ஸ்லோகங்களில் இந்த நாராயணீம் படைக்கப்பட்டுள்ளது.

நாராயணீயம் ஸ்ரீமன் நாராயணனை துதித்து பாடப்பட்டது. இதனை அருளியவர் ஸ்ரீ நாராயண பட்டத்ரி.

நாராயண பட்டர் ( இயற் பெயர் நாராயண நம்பூத்ரி. ) இவர் கேரளா மாநிலம் மேல்புதூர் என்ற இடத்தில் பிராமண குலத்தில் பிறந்தவர்.

இவருக்கு சிறு வயது முதலே வட மொழியில் நல்ல புலமையும் இலக்கண இலக்கியங்களையும் கற்று தேர்ந்தார். இவரது குரு அச்சுத பிஷரோடி ஆவார். நாராயண பட்டர் தனது 16 வது வயதிலேயே நல்ல பாண்டித்யம் பெற்றவராக விளங்கினார்.

அந்த சமயத்தில் அவரது குரு வாத நோயினால் பாதிக்கப்பட்டு பெரிதும் துன்பப்பட்டு வந்தார். தனது குருவிற்கு சேவைகள் செய்துவந்த இவர்க்கு அவரது பிணி நீங்க யோசித்து வந்தார்.

ஆண்டவனை தியானித்து தனது குருவின் பிணியினை தனக்கு கொடுத்து அவரை குணமாக்க வேண்டினார்.

இறைவனின் சங்கல்ப படி அவரது வாத நோயினை தான் பெற்றுக்கொண்டு குருவை குணம் பெற செய்தார்.

நோயால் பாதிக்கபட்டு பட்டத்ரி கஷ்டப்பட்டு பிணி தீர பல்வேறு உபாயங்களை தேடும் போது அப்போது கேரளாவில் பிரசித்தி பெற்ற கவிஞரும், ஜோதிடருமான எழுத்தச்சன் என்பவரை அணுகினர்.

அவரோ பட்டர் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து வியந்து, இவர் மதஸ்யத்தை தொட்டு வழிபட்டால் பிணி தீரும் என கூறினார்.
பிராமண குலத்தில் பிறந்த நான் மீன்களை தொடுவதா என எண்ணினார்.

தீவிர சிந்தனைக்கு பிறகு அவர் சொன்ன உபாயம் புரிந்தது. மச்சவதாரத்தை தொட்டு ஆரம் பித்து வழிபட நோய் விலகும் என்று.

அவரின் வழிகாட்டுதலின் படி பட்டத்ரி பரசுராம க்ஷேத்திரம் என்று கூறப்படும் கேரளாவில் (கிருஷ்னன் ) குருவாயூரப்பன் ஆலயத்தை நோக்கி பயணித்தார். இது எல்லாமே குருவாயூரப்பன் சங்கல்பம்.

அங்குதான் “ஸ்ரீமத் நாராயணீம் ” உருவானது…….

அதனை பாடிய விதம், அதன் மகிமை மற்றும் பலன்களை தொடர்ந்து பாருங்கள்….

நாளையும தொடரும்……..

லோகா சமஸ்தா சுகினோ பவந்து………
……. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: