இன்று நாம் காணவிருப்பது ஸ்ரீமத் நாராயணீயம் தொடர்ச்சி …..(3)
குருவாயூரப்பன் சன்னதியில் முதல் தசகமாக
“சாந்த்ரா நந்தா வபோ தாத்மக
மமநுபமிதம்” ……. என்ற ஸ்லோத்த்ததுடன் ஆரம்பிக்கிறார். இதில் பகவன் ஸ்வரூபம் பற்றி விவரிக்கிறார். தசகத்தின் கடைசி வரியில் என் பிணியினை நீக்கி அருள்புரியவேண்டும் என முடிப்பார்.
இப்படி 99 தசகங்கள் பாடி 100 தசகமான
“அக்ரே பச் யாமி தேஜோ நிபிட தர……… ” என்ற ஸ்லோத்தில் ஆரம்பித்து 10 ஸ்லோகங்களும் குருவாயூரப்பனை தலை முதல் பாதம் வர்ணித்து பாடுகிறார். (கேசாதிபாதம் )
அப்போது குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷமாக காட்சி தந்தாராம். அன்றே அவரது நோய் விலகி பரிபூரண தேக ஆரோக்யம் பெற்றாராம்.
இன்றும் அந்த நாளை குருவாயூரில் கார்த்திகை மாதம் 28 ம் நாள் நாராயணீய தினமாக கொண்டாடபட்டு வருகிறது.
அப்பனே ! உன் பெருமை நன்கு தெரியாமல் கூறியவற்றை பொறுத்தருள வேண்டும். ஆயிரத்திற்கும் சற்று மேற்பட்ட இவ் தோத்ரிங்கள் உன் அருளை பெற காரணமாக இருக்கவேண்டும்.
நாராயணன் என்ற கவி நாராயணனை குறித்து நாராயணீயம் என்ற பெயரில் இயற்றப்பட்டது. இது வேதத்தை அடிப்படையாக கொண்டு, அவதாரங்கள் திருவிளையாடல்கள் மூலம் துதிக்க தகுந்த தன்மையை சொல்கிறது.
எனவே இதனை படிப்பவர்க்கு சகல வியாதிகளும் நீங்கி, உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என குருவாயூரப்பனை பிராத்தித்து, உறுதியும் செய்கிறார் பட்டத்ரி.
இப்போது எந்த தசகம், படித்தால் என்ன பலன்கள் கிட்டும் என்று பார்ப்போம். (சிலவற்றை மட்டும் கொடுக்கிறோம் )
1 ம் தசகம்……… வைகுண்ட கெளரவம் கிட்டும்.
13வது தசகம்….. செல்வம், புகழ் நீண்ட ஆயுள்.
19வது தசகம்……. கர்ம பந்தங்களிலிருந்து மீட்சி பெறலாம்.
32வது தசகம்…….. விருப்பம் நிறைவேறும்.
97வது தசகம்……… உலக பந்தத்திலிருந்து விடுதலை கிட்டும்.
100 வது தசகம்…….. தேக ஆரோக்யம், சந்தோஷம், நீண்ட ஆயுள் கிட்டும்.
இதன் விளக்கங்களை சொல்ல அதிக நாட்கள் எடுத்து கொள்ள வேண்டிவரும் என்பதாலும்,கால தேச வர்த்தமானத்தை மனதில் கொண்டு மிக மிக
சிறிய விளக்கத்துடன் சாரத்தை மட்டும் சொல்லி பூர்த்தி செய்கிறேன்.
இன்றளவும் இதனை பாராயணம் செய்து நல்ல பலன்களை பெற்று வருகிறார்கள். நாராயணனை பற்றி பாடிய இந்த நாராயணீயத்தை பாராயணம் செய்து சகல சௌக்யங்களும், நீண்ட ஆயுள், தேக ஆரோக்கியம் பெற்று வாழ்வோமாக.
” நலம்தரும் நாராயணீயம் ”
லோகா சமஸ்தா சுகினோ பவந்து…………
……. ஸ்ரீ