நாம் தெரிந்து கொள்ளப் போவது:
“அக்ஷய திருதியை”
சித்திரை மாதம் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் (வளர் பிறை திரிதியை) தான் அக்ஷய திரிதியை
அக்ஷய திருதியையின் சிறப்பு.:
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்த திருநாள்.
திரேதா யுகம் துவங்கிய நாள் அக்ஷய திருதியை
அக்ஷய திருதியை அன்று தான் பிரம்மா உலகை படைத்தான் என புராணம் கூறுகிறது.
மணிமேகலை அக்ஷய பாத்திரம் பெற்ற நாள்
ஐஸ்வர்ய லக்ஷ்மி, தான்ய லட்சுமி அவதார நாள் அக்ஷய திருதியை.
அக்ஷய திரிதியை
சாபம் பெற்று தேய்ந்து போன சந்திரன் அக்ஷய திருதியை தினத்தன்று சாப நிவர்த்தி பெற்று அக்ஷய திரிதியை தினத்திலிருந்து மீண்டும் வளரத் தொடங்கினார். இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் எல்லாம் வளர்பிறை போல வளரும். எனவே தங்கம் வாங்குவது பழக்கமானது
அக்ஷய திருதியை அன்று செய்ய வேண்டியவை :
- அக்ஷய திருதியை அன்று பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.என சொல்கிறது தர்ம சாஸ்திரம்.
- நெல், அரிசி, கோதுமை, பசு,.விசிறி, போன்றவை தானம் செய்ய சொல்கிறது புராணம்.
- அன்ன தானம் செய்வது சிறப்பு.
மிருத சஞ்சீவினி மந்திரம் ஜபித்தால் நோய்கள் விலகும்
திருப்பரங்குன்றம்,
திருச்சோற்றுத்துறை , விளங்குளம்
ஆலயங்களில் சிறப்பு பூஜை உண்டு.
அக்ஷய திருதியை உருவான கதை :
பாஞ்சால நாட்டு மன்னர் ‘பூரியசஸ்’.
நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டு மற்ற நாடுகள் இன் நாட்டின் மீது போர் தொடுத்து நாட்டை கைப்பற்றினர்.
போரில் சிக்காமல் காட்டிற்கு தப்பி ஓடிய பூரியசஸ் காட்டில் முனிவர் களை காண அவர்களிடம் தம் குறையை கூறினான்
முன் பிறவியில் நீ அடுத்தவன் சொத்துக்களை கொள்ளை அடித்து வந்த நீ ஒரு அந்தனருக்கு உன்னையும் அறியாமல் தண்ணீர் அளித்து உதவி செய்தாய் அதனால் இப் பிறவியில் நீ அரசனாக பிறந்தாய் என கூறினார்.
இதை கேட்ட மன்னர் அக்ஷய திரிதியை அன்று காட்டில் வருவோர்க்கு தண்ணீர் அளித்து தொண்டு செய்து வந்தான்.
அப்போது மஹா.விஷ்ணு காட்சி அளித்து அருள் பாலித்தார். அந்த நாள் தான் அக்ஷய திருதியை.
இந்த விசேஷமான நாளில் தெய்வ வழிபாடும், முடிந்த அளவு தானங்கள் செய்வதும் நல்லது. தங்கங்களை வாங்கி வரும் இன் நாளில் புண்யங்களையும் சேர்ப்போமே….
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..
……. ஸ்ரீ