கந்த புராணம் பகுதி 5

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :

” கந்த புராணம் – சூர சம்ஹாரம் ”
( பகுதி – 5 )

முருகன் அம்மையப்பர் ஆசியுடனும், தன் படைகளோடும், திருச்செந்தூர் வந்து தங்கினார்.

முருகன் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம், சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கின்றார்.

முருகப் பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யுமாறு தூதனுப்பினர். முருகன் என்ற சிறுபாலகனுக்கு பயந்து தேவர்களை விடுதலை செய்ய முடியாது என மறுத்தான். முருகன் உடனே இலங்கையில் உள்ள வீரமகேந்திரபுரிக்கு படையெடுத்து சென்றார். கந்தன் ஏமகூடத்தில் பாசறை அமைத்து (கதிர்காமத்தில்) சூரனுடன் போரிட துவங்கினான்.

தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்தார். சூரனின்மகன் அக்னி
முகாசூரன் உள்ளிட்ட 3000 பேரும் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் சென்றான்.

பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியானான். சூரனின் தம்பி சிங்க முகனும் போருக்குச் சென்று மடிந்தான்.

தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்த சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்ல முடிவு செய்து முருகப் பெருமான் முன் தோன்றி சமாரியாக அம்புக்கணை தொடுத்தான். அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயயாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான். தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தியும் ஆணவத்தால் போர் செய்யலானான்.

தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய மறுத்தான். முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், தன் தன்மை மாறாது போர் செய்யலானான். தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். முருகப் பெருமான் இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாயால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான்.

அம்பிகையும் தன் பங்காக குமரனுக்கு ஸர்வ வல்லமை படைத்த வேலை அளிக்க அதை பெற்று கொண்டு போருக்கு செல்கிறார்.

ஆறுநாள் கடுமையான போரால் தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் கடலில் மறைந்திருந்தான். கடைசியாக ஆறாம் நாள் நடுக்கடலில் மாமாரமாய் நின்ற சூரபத்மனை முருகப் பெருமான் எய்திய வேலாயுதமனது இரு கூறாக்கியது. ஆணவம் அழியப்பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து தம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டினான்.

அவன்மேல் இரக்கம் கொண்டு பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது.
வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி எனப்படும் கந்த சஷ்டி.

சூரனை வதம் செய்த இடம் தற்போதைய கதிர்காமம்.(ஏம கூடம்) தன் அவதார நோக்கத்தை முருகப் பெருமான் பூர்த்தி செய்ய, இந்த சம்ஹார வெற்றியை தேவர்கள் அனைவரும் கொண்டாடிய பரம புண்ணியத் தலம் திருச்செந்தூர் ஆகும்.

சூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறார் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.

சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம்மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் செய்ய எண்ணினார்.. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்தாலும் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் முருகன்- தெய்வானை திருமணம் நடைபெற்றது.

இவ்வாறாக சூரபத்மன் சம்ஹாரம்
நடந்தேறியது.

செந்தூர் கடற் கரையில் – நந்தா விளக்கின் உயர் – சிந்தாமணிக்கு
நிகர் ஆனவன்.

கந்தா குஹா கௌரி – மைந்தா எனக்
கனிந்து –
வந்தார் மன குறைகள் தீர்ப்பவர்.

என பாடி நாளை முருகனின் அறு படை வீடு பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ……
…….. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: