சிறந்தவனாக இரு, சிறந்ததை வைத்திரு, சிறந்ததை செய்.
ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது.
தவறே செய்யாத மனிதன் இல்லை,தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை.
வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்.
வாழ்க்கை தரும் பாடம்
எதுவும் சில காலம்தான்.
எதிர்ப்பார்ப்பை குறைத்துகொண்டால் ஏமாற்றம்ஒன்றும் பெரிதாகஇருக்காது.
நம்பு, யாரையும் முழுமையாகநம்பாதே. உன்னை மட்டும் வாழ்வில் நம்பு.
சிந்தனை செய், கோபப்படாதே.
வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை. அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட்டு போ.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, நீ மற்றவர்கள் மனதில் வாழும்வரை.
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும்உணரவைக்க முடியாது.
உன் மனம் ஒன்றே உன்னைவீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரையில் நீஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.
உனக்கு நீ நல்லவனாய் இருந்தால்போதும், மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை. கண்ணில் பிழை என்றால் பிம்பமும்பிழையே.
அது பார்க்கப்படுபவன் பிழையல்ல, பார்ப்பவன் பிழை.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து
…….. ஸ்ரீ