ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு துயர்தீர்த்தநாதர் திருக்கோயில் (ஓமாம்புலியூர் )
சிவஸ்தலம் பெயர் | திருஓமாம்புலியூர் |
இறைவன் பெயர் | துயரந்தீர்த்தநாதர், பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் |
இறைவி பெயர் | பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை |
பதிகம் | திருநாவுக்கரசர் -1 திருஞானசம்பந்தர் – 1 |
எப்படிப் போவது | சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 31 கி.மீ. தொலைவு. காட்டுமன்னார்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ.தொலைவு. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி, மோவூர் வழியாக அணைக்கரை செல்லும் நகரப் பேருந்து எண் 41 இத்தலம் வழியாகச் செல்கிறது. கோவில் வாயிலில் இறங்கிக் கொள்ளலாம். |
ஆலய முகவரி | அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் ஓமாம்புலியூர் ஓமாம்புலியூர் அஞ்சல் காட்டுமன்னார்குடி வட்டம் கடலூர் மாவட்டம் PIN – 608306 இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ