ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
திருக்கடைமுடி திருத்தலம்
சிவஸ்தலம் பெயர் | திருக்கடைமுடி (தற்போதைய பெயர் கீழையூர்) |
இறைவன் பெயர் | கடைமுடிநாதர், அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் |
இறைவி பெயர் | அபிராமி |
பதிகம் | திருஞானசம்பந்தர் – 1 |
எப்படிப் போவது | மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது. கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை – பொறையார் சாலையிலுள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருசெம்பொனார்கோவிலில் (காவிரி தென்கரைத் தலம்) இருந்து திருநனிபள்ளி (புஞ்சை) வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம். |
ஆலய முகவரி | அருள்மிகு கடைமுடிநாதர் (அந்தஸம்ரக்ஷணேஸ்வரர்) திருக்கோவில் கீழையூர் கீழையூர் அஞ்சல் தரங்கம்பாடி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN – 609304ஆலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: தொலைபேசி எணகள் – 04364 283360, 04364 283261, 94427 79580 |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ