ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது: தெரிந்ததும் தெரியாததும் பகுதி
இன்றைய கேள்விகளுக்கான பதில்களை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
- காவிரியில் துலா ஸ்நானம் எந்த தமிழ் மாதம் செய்ய வேண்டும்
- திருவெம்பாவை இயற்றியவர் யார்?
- கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் யார்?
- திருமாலை வழிபாடு செய்பர்கள்….. ……. என அழைக்கப்படுவர்
- நவகிரக ஆலயத்தில் சந்திரனுக்கு உள்ள ஸ்தலம் எங்குள்ளது?
- பெரிய திருவடி என யாரை அழைப்பர் ?
- ஆண்டுக்கு ஒரு பாடல் என சிவன் மீது பாடியவர் ?
- விநாயகர் மீது ஆதிசங்கரர் பாடிய பாடல் எது ?
- அர்ஜுனனின் வில்லின் பெயர் என்ன?
- ஸ்ரீசக்ரத்தில் எந்தனை முக்கோண அமைப்பு உள்ளது.
- மஹாபாரத போர் நடந்த இடம் எது?
- பீஷ்மர் அருளிய விஷ்ணு சஹஸ்ர நாமத்தை மீண்டும் யார் சொல்லி வியாசர் எழுதினார்.
- கிருஷ்ணனிடம் இருந்த சக்ரம் பெயர் ?.
- தினமும் காலையில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில் விபூதியை பிரசாதமாக கொடுக்கப்படும் ஸ்தலம் எது ?
- ஷன் மத வழிபாட்டு முறையை ஏற்படுத்தியவர் யார்?
- சித்து , அசித்து என்றால் என்ன?
- இராமன் தனது அவதாரத்தை முடித்துக்கொண்ட இடம்?
- விநாயகர் தேரின் அச்சை முறித்த இடம்
- சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள பெருமாளின் பெயர் என்ன?
- கர்ணன் கடைசியாக கொடுத்த தானம் என்ன ?
பதில்கள்:
- ஐப்பசி மாதம்
- மாணிக்கவாசகர்
- தேவராய சுவாமிகள்
- வைணவர்கள்
- திங்களூர்
- கருடாழ்வார்
- திருமூலர்
- கணேச பஞ்சரத்னம்
- காண்டீபம்
- நாற்பத்தி மூன்று (43)
- குருட்சேத்ரம்
- சகாதேவன்
- சுதர்சன சக்ரம்
- திருச்செந்தூர்
- ஆதிசங்கரர்
- சித்து என்றால் உயிர்களின் தொகுதி அசித்து என்றால் உயிரில்லாத பொருளை குறிக்கும்
- சரயு நதி
- அச்சிறுப்பாக்கம்
- கோவிந்தராஜ பெருமாள்
- தான் வைத்திருந்த புண்ணியம்