தேவி கட்க மாலா

இன்று நாம் தெரிந்து கொள்ளப்
போவது :

” தேவி கட்க மாலா ”

தேவி.., என்றால் ‘சக்தி’ வடிவான தெய்வீக அன்னை . கட்க என்றால் -பாதுகாப்பு தரும் ஆயுதம் ( வாள் ) , கவசம் போன்றது ,…..மாலா – மாலை. ஸ்தோத்ரம் – கீர்த்தனை அல்லது ஸ்துதி , பாட்டு ஆகும்.

எவர் இந்த ஸ்துதியை ஸ்துதிக்கிறார்களோ , அவர்களின் கழுத்தில் அணிந்த மாலை போன்று, கவசமாக இருந்து அவர்களை அன்னை காப்பாள்.

மிகவும் சக்தி வாய்ந்த, ஆற்றல் மிக்க, மந்திர அதிர்வுகளைக் கொண்ட ஸ்துதி இது. ஸ்ரீ சக்ரத்தில் வாசம் செய்யும் தெய்வங்களின் பெயர்களைத் தன்னகத்தே கொண்டது.

மத்தியத்தில் அமர்ந்த ஸ்ரீ லலிதையைச் சுற்றி, அமர்ந்துள்ள 98 யோகினிகளையே இதனில் வணங்குகிறோம். அவர்களுக்கு உரிய இடம் மற்றும் சக்திகளை, அவர்களின் செயல்களை மனதினால் நினைத்து, பெயரினை பூரண அன்போடு உச்சரிக்க, நம்முள் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் அதிர்வுகளை தன்னகத்தே கொண்ட மந்த்ரஆற்றல் மிக்க சொற்களால் ஆனது.

இதனை பாராயணம் செய்தாலே இயல்பான தியானம் நிகழ்கிறது.

அம்பிகையை நோக்கி செல்லும் பாதை கணித அமைப்பு கொண்டதே ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பாகும். சாதகன் இந்த பிரபஞ்சத்தைக் கடந்து நிற்கும் பேரறிவான, ஆற்றலை எவ்வாறு அடைகிறான் என்பதே அடுத்தடுத்த யோகினிகள் அமைப்பிடமும், அவர்களின் செயல்பாடுகளையும் சாதகன் தன்னுள் மெல்ல , மெல்ல தன்னகத்துள்ளே உணர்ந்துகொள்கிறான்.

இவ்வண்டம் கடந்த பேரறிவே தானாகிறான். உடல் வேறு , தான் வேறு என்ற அனுபவம் பெற்ற பின் மிஞ்சி இருப்பது ஆன்மா. ஆன்மாவே ..அறிவுமயம். மனமற்ற எண்ணங்களற்ற …..ஆனந்தமயம்.

அன்னையே ! உன்னை நீயே…..உள்ளபடி காண்பித்து அருள்க ” என பிராத்தித்து தினமும் இதனை பாராயணம் செய்தல் மிகவும் நன்று. ஸ்ரீ வித்யா உபாசகர்கள் நவாவர்ண பூஜையில் கிடைக்கும் பலனை ……. ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரத்தின் மூலம் பெறலாம் என்பர்.

செய்ய வேண்டியதெல்லாம் இதனை தினசரி பாராயணம் செய்தலே. பின்னர் அன்னையின் காட்சியும், குருவும் தாமே வந்து அடுத்த படிக்கு அழைத்துச் செல்வார்கள்.

இதனை பாராயணம் செய்யுமிடத்தில் ஏழ்மை , துன்பம் , நோய்கள் , மனக் குழப்பங்கள் , எல்லா வித துயரங்களும் அகன்று விடும். சகல தேவதைகளுடன் கூடி அன்னை லலிதாம்பிகை அங்கு வாசம் செய்வாள். ஆனந்தம் பொங்கும் செயல்கள் நித்தியமாய் அங்கு நிகழும்.

சக்தி விளங்கும் அருள்வாக்கும் மகா
சாந்தி விளங்கும் அருள் நோக்கும்
பக்திபுரியும் அருள் வாழ்க்கையும் தருவாய் …ஆதி தேவியே அம்மா
எனை ஆள வா வா அம்மா. என பக்தியுடன் பாடி துதிப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ……
……. .ஸ்ரீ

1 thought on “தேவி கட்க மாலா”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: