ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது த்யானம் என்றால்…
முதலில் தியானம் என்ற வார்த்தை வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு பொருள் கொண்டதாகத் தோன்றுகிறது.
ஒரு சிலருக்குத் தியானம் என்றால் மனதை அமைதியாக்குவது, அமைதியான அல்லது இன்பமான நிலையை
உண்டாக்குவது அல்லது சாதாரண எதார்த்த நிலையிலிருந்து தப்பிச்செல்வது என்று பொருள் படுகிறது.
வேறு சிலருக்கு விசேடமான அனுபவங்கள் அல்லது மந்திரகரமான மனநிலைகளைக் குறிக்கின்றது.
மருந்து எவ்வாறு உடலின் நோயைக் குணப் படுத்துகிறதோ அதே போலத் தியானம் என்பது மனத்தின் நோயைக் குணப் படுத்துகிறது. மருந்தை, தற்காலிக இன்ப நிலைகளுக்கு எடுத்துச்செல்வதற்கான ஒரு கருவியாக நாம் பயன்படுத்துவதில்லை. மேலும் மருந்தை, போதைப் பொருட்கள் தற்காலிக இன்பம் தந்து விட்டு மீண்டும் போதை தெளிந்த பின் பழைய நோய் கொண்ட நிலையிலேயே விட்டுச் செல்வதைப்போல நாம் நினைப்பதில்லை. மருந்தின் நோக்கம் உடலை நிரந்திரமாகக் குணப்படுத்தித் தன் இயல்பான ஆரோக்கிய நிலைக்கு எடுத்துச் செல்வதேயாகும்.
அதுபோலவே தியானம் செய்வதற்கான காரணமும் தற்காலிகமான அமைதி நிலைக்கு எடுத்துச் செல்லாமல் கவலையும், அழுத்தங்களும், செயற்கையாக நாம் கற்றுக் கொண்ட பழக்க தோஷங்களும் உள்ளடங்கிய மனத்தை இயல்பாக அதன் ஆரோக்கியமான அமைதி நிலைக்கு நிரந்தரமாக எடுத்துச் செல்வதே ஆகும்
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ