இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது
“நமஸ்கரங்கள் ”
வணக்கம், நமஸ்காரம் என்பவையெல்லாம் பணிவைக் குறிக்கும் வார்த்தைகள். இவற்றில் “நமஸ்காரம்’ என்ற சொல்லுக்கு “வளைவது’ என்று பொருள். “தனக்கென்று எதுவுமில்லாமல், இறைவனுக்கே சகலமும் அர்ப்பணம் என்று சரணாகதி அடைதல்’ என்ற பொருளும் இதற்கு உண்டு. அதனால் தான் கோயில்களுக்குச் சென்று இறைவனை வணங்குவதை “நமஸ்காரம்’ என்கின்றனர்.
நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும். அவை, ஓரங்க நமஸ்காரம், த்ரியங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.
ஓரங்க நமஸ்காரம்:
வழிபடுபவர் , தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.
த்ரியங்க நமஸ்காரம்:
வழிபடுபவர் தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது த்ரியங்க நமஸ்காரம்.
பஞ்ச அங்க நமஸ்காரம்:
வழிபடுபவர் தனது தலை, கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.
அஷ்டாங்க நமஸ்காரம்:
ஒருவர் தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.
சாஷ்டாங்க நமஸ்காரம்:
வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழங்கால்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.
செயல் ஆவது யாதொன்றும் இல்லை
எல்லாம் உன் செயல்;
என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்.
இறைவனுக்கு 3 முறை,
சன்னியாசிகளுக்கு 4 முறை,
தாய்-தகப்பனுக்கு ஒருமுறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
மனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யும் போது, அவர்கள் அவசியம் ஆசியளிக்க வேண்டும்.
கோவிலில், இறைவனைத்தவிர வேறு யாருக்குமே நமஸ்காரம் செய்யவே கூடாது.
இறைவன் பாதங்களை பற்றிக்கொண்டு வேண்டும் எவர்க்கும் அவன் கண்டிப்பாக ரக்ஷிப்பான்.
உதாரணமாக நாம் வீட்டிலே கூட நாம் தினமும் வெளியில் கிளம்பும் போது நம் குழந்தை சந்தோஷப்பட ஒரு சுற்று நமது வண்டியில் கூட்டி செல்வது வழக்கம்.
ஒரு நாள் அவசர வேலை காரணமாக கிளம்பும் போதும் குழந்தை கேட்க அப்பறம் போகலாம் என சொல்லி கிளம்ப முற்படும் போது திடீரென குழுந்தை அழுதுகொண்டே காலை பிடித்து கொள்கிறது. எப்பேர்பட்டவனும் அந்த நேரத்தில் என்னதான் அவசர வேலை இருந்தாலும் காலைப்பிடித்த குழந்தையை தூக்கி அதன் ஆசையை நிறைவேற்றுவான்.
காலை பிடிக்கும்போது நாமே நம் மனம் இளகி செயல் படுவதை போல் இறைவன் பக்தனாகிய நம்மை கண்டிப்பாக கைவிடமாட்டான்.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து ….. …..
……. ஸ்ரீ