நாம் தெரிந்து கொள்ளப் போவது :
” நலம் தரும் நரசிம்மர் ”
ஆடி ஆடி அகம் கரைந்து, இசை பாடி
பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி
நாடி நரசிங்காவென்று வாடி வாடி
இவ்வாணுதலே. ……. (சுவாமி
நம்மாழ்வார் )
நரசிம்மர் மகிமை :
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின்
நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது.
தன் பரமபக்தனான பிரகலாதனைக்
காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம்.
நரசிம்மரின் பல நாமங்கள் :
அக்ணிலோசனா -அக்ணி போல் கண்கள் உடையவர்
பைரவடம்பரா – கர்ஜனையால் எதிரிகளை பயம்புருத்துபவர்
கரால – அகன்ற வாயையும் கூர்மையானா பற்களை உடையவர்
இரணியகஷிப்புதும்ஷா – இரணி யனை விழ்த்தியவர்
நகஸ்த்ரா – நகங்களை ஆயுதமாக உடையவர்
சிங்கவதனா – சிங்க முகத்தை கொண்டவர்
மிருகேந்திரா – மிருகங்களின் அரசன் – சிங்க ராஜா.
பலதேவா – உயர்ந்த – சிறந்த உருவம் உள்ளவர்
நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.
பிரகலாதானின் பக்தி உணர்த்துவது, தூய்மையான பக்தி என்பது அவர்களது பிறப்பு சமபந்தபட்டது அல்ல அவர்களது குணம் சமபந்தபட்டது என்பதை உணர்த்துகிறது.பிரகலாதான் அசுரனாக பிறந்தாலும் இறைவன் மீது இருக்கும் சிறநத பக்திக்கு உதாரணமாக விளங்குகிறார்,எப்பேர் பட்ட தடை,அவமானங்கள் வந்தாலும் நம்பிக்கையை விடவில்லை
நரசிம்மரை பல வடிவங்களாக வழிபடுகின்றனர் அவை :
உக்கிர நரசிம்மர்
குரோத நரசிம்மர்
வீர நரசிம்மர்
விலம்ப நரசிம்மர்
கோப நரசிம்மர்
யோக நரசிம்மர்
அகோர நரசிம்மர்
சுதர்சன நரசிம்மர்
லட்சுமி நரசிம்மர்
ஆந்திராவில் உள்ள அகோபிலம்
இடத்தில் உள்ள கோயிலில் உள்ள நவ நரசிம்மர் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மலைக்கோயிலில் நரசிம்மரை தரிசனம் கண்டவர்கள்: பிரகலாதன், கருடன்.
நவ நரசிம்ம க்ஷேத்ரம் : மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இதனை “நவ நரசிம்ம க்ஷேத்ரம்’ என்பர். மலையின் கீழ் உள்ள அஹோபிலத்தில்,
1. பார்கவ நரசிம்மர் (சூரியன்)
2. யோகானந்த நரசிம்மர் (சனி)
3. சக்ரவட நரசிம்மர் (கேது) ஆகிய கோயில்களும், மேல் உள்ள அஹோபிலத்தில்
4. அஹோபில நரசிம்மர் (குரு)
5. வராக (குரோதா) நரசிம்மர் (ராகு) 6. மாலோலா நரசிம்மர் (வெள்ளி)
7. ஜுவாலா நரசிம்மர் (செவ்வாய்)
8. பாவன நரசிம்மர் (புதன்)
9. காரஞ்ச நரசிம்மர் (திங்கள்) ஆகிய கோயில்கள் உள்ளன.
இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும்.
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
நரசிம்மருக்கு எத்த னையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவமே அதிக பக்தர்களால் விரும்பப்படுகிறது
நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.
கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத்தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்
நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
நாமக்கல் நரசிம்மர் சக்திவாய்ந்தது. இவ்விடத்தில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.
உக்கிர தெய்வமான நரசிம்ம மூர்த்திக்குரிய காயத்ரி மற்றும் இதர மந்திரங்கள் துதித்து வழிபடுவதால் நம்மை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக தீய ஆவிகள், எதிரிகளின் செய்வினை மாந்திரீக பாதிப்புகள் அனைத்தும் ஒழியும். உடல் மற்றும் மன நலம் மேம்படும். தைரிய குணமும், எதிரிகளை ஒழிக்கும் பராக்கிரமம் உண்டாகும். கர்மவினைகள் மற்றும் எத்தகைய தோஷங்களும் உங்களை பாதிக்காது
. நரசிம்ம காயத்ரி மந்திரம்
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்”
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..
…….. ஸ்ரீ