மகான்கள் அவதாரம்

ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீராமானுஜர் அவதார திருநாள் :

பகவத்பாதர் :

ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்.

ஆதிசங்கரர், கேரளத்திலுள்ள “காலடி” எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார்.

இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வதை தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்

சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கௌமாரம், சௌரம்,
சாக்தம் என்ற ஷண்மத வழிபாட்டு வகையினை ஏற்படுத்தினார்.

மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

ஸ்ரீ ராமானுஜர் ;

உடையவர் ஸ்ரீ ராமானுஜர் இப்பூலகில் தோன்றி ஆயிரம் ஆண்டுகளாகின்றன..

ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம் என்பது ஐதீகம்.

பிங்கள வருடம் சித்திரை மாதம் பதின்மூன்றாம் நாள்..
வியாழக்கிழமை வளர்பிறை பஞ்சமி திதி..
திருவாதிரை திருநட்சத்திரத்தில், கடக லக்னத்தில்
ஆசூரி கேசவ சோமாஜி பட்டர் – காந்திமதி தம்பதியரின் திருக்குமரனாக வந்துதித்தார்..

தற்போது ஸ்ரீபெரும்புதூர் என்றழைக்கப்படும் இடம்தான்
உடையவரின் அவதாரத் திருத்தலம்..

அக்காலத்தில் ஸ்ரீபெரும்பூதூரின் திருப்பெயர் – ஸ்ரீ பூதபுரி என்பதாகும்..

120 ஆண்டுகள் இப்பூலகில் வாழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜர்..

வாழும் காலத்திலேயே ஜாதி பேதங்களைக் கடந்த நிலையைக் காட்டியவர்..
சமயத்திலும் சமூகத்திலும் பற்பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர்..

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் அன்பு காட்டினார்..

அவர்களைத் திருக்குலத்தார் என்றழைத்துப் பெரும் புரட்சி செய்தவர்…

தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கருணை கொண்டு அவர்களைத்
தம்முடன் அரவணைத்துக் கொண்ட உத்தமர்…

ராமானுஜர் அருளிய ஒன்பது நூல்கள்: வேதார்த்த ஸங்கிரஹம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம், மற்றும் நித்ய க்ரந்தம்.

எந்தையெதிராசர் இவ்வுலகிலெந்தமக்கா

வந்துதித்த நாளென்னும் வாசியினால் இந்தத்

திருவாதிரை தன்னின் சீர்மைதனை நெஞ்செ

ஒருவாமலெப் பொழுதுமோர்

நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே”

வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!

” குருவே சரணம் ”

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ……
……. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: