வேதம் கூறும் தகவல்

இன்று நாம் காணப்போவது
“வேதம் “.

வேதம் என்பது இயற்கையுடன் கூடிய அறிவியல்.
வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை, எழுதவும் இல்லை. வேதம் தோன்றிய காலம் மிக மிக பழமையானது..

பண்டைய காலத்தில் ஞானிகளும், ரிஷிகளும் தவம் செய்யும் போது அவர்களது வாய்மொழியாக வந்த மந்திரங்கள் தான் வேதமாக கருதப்படுகிறது.

ஹிந்து சமயத்துக்கு அடிப்படையானது நான்கு வேதங்கள். 1. ரிக் 2. யஜுர் 3. சாம, 4. அதர்வணம்.

ரிக் வேதம் மிக பழமையான வேதமாகும். ரிக் வேதத்தில் முதன்மையாக குறிப்பிடும் தெய்வம் அக்னி, இந்திரன், சோமன்.

வேதம் இயற்கை முதல் இறைவன் வரை அனைத்தும் ஆட்கொள்ளப்பட்டுள்ளது.

வேதத்தில் 4 பாகம் உண்டு.
1. மந்திரம்…. கடவுளால் தரப்பட் டதாக கருதப்படுகிறது.

2.பிராமணா….. எனப்படுவது சடங்கு வழி முறை ( வேள்வி )

3.ஆரண்யக….. எனப்படுவது காட்டில் வாழும் முனிவர்கள், ரிஷிகளின் உரை.

4. உபநிஷதங்கள்…… என்பது வேதங்களின் தத்துவ உரை அல்லது விளக்கம்.

வேதங்கள் 1 & 2 கர்ம காண்டங்களாகவும் அதாவது செயலுக்கும் அனுபவத்துக்கும் உரியது.
3 & 4 மெய்ப்பொருள் உணர்வதற்கு உரியது.

உப வேதங்கள் :

1.ஆயுர்வேதேம்…….இது ரிக் வேதத்தின் உப வேதம். (மூலிகை )
2.தனுர் வேதம்…. யஜுர் வேதத்தின் உப வேதம் (செயல் முறை )
3.காந்தர்வ வேதம்…… சாம வேதத்தின் உப வேதம் ( இசை, நடனம் )
4.சில்ப வேதம்….. அதர்வண உப வேதம் ( கட்டிட கலை )

வேதத்தின் ஆதாரம் ஓசை மற்றும் இசை.
ரிக் வேதம்….. இந்திரன் வருணன் அக்னி போன்றோரை போற்றி வணங்குதல்.

யஜுர் வேதம் யாகங்கள் செய்து வழிபடும் முறை.

சாம வேதம் சந்தோஷ படுத்துதல். பாடல்களின் தொகுப்பாக படிக்கும் போதே மகிழ்ச்சி தரும்.

அதர்வண வேதம்… மகரிஷியால் உலகுக்கு அளிக்க பட்டது. எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடும் மந்திரங்கள் கொண்டது.

வேதத்தில் சொல்லாத விஷயங்கள் எதுவுமே கிடையாது. அன்று வேதத்தில் சொன்னவைகள் அனைத்துமே இன்று அறிவியில் பூர்வமாக நிரூபிக்கபட்டு வருகிறது.

வேதங்களை போற்றி பாதுகாப்பது நமது கடமை. அந்த வேதங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் இதனை போதித்து நமது ஹிந்து சனாதன தர்மத்தை வளர்ப்போமாக !.

லோகா சமஸ்தா சுகினோ பவந்து !
……… ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: