இன்று நாம் அறிந்து
கொள்ளப்போவது :
” ஸ்நானம்”
ஸ்நானம் என்பது குளியல் அல்லது நீராடல் என்று பொருள்.
இந்துக்களின் வாழ்வில் நீர் மிகவும் இன்றியமையாதது. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றிற்கும் நீர் தேவை.
ஸ்நானம் 5 வகைப்படும்.
ஆக்னேயம் வாருணம் பிராம்மம் வாயவ்யம் திவ்யமேவ ச (பராசர ஸ்ம்ருதி)
ஆக்னேயம் : விபூதிக் குளியல் அக்னியில் இருந்து எடுக்கப்பட்ட பஸ்மத்தை (சாம்பல்)
பூசி கொள்ளுதல். இதனை தண்ணீர் விட்டு குழைக்காமல் பூசுதல். இதற்கு பஸ்மோத்துளனம் என்று பெயர்.
வாருணம் : நீரில் முழுகிக் குளித்தல் நதிகளில் குளங்களில், குளித்தல்.
நீரில் குளிப்பது தான் உசிதம். மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்..
பிராம்மம் : மந்திரம் சொல்லி நீரை உடல் மீது தெளித்துக் கொள்ளல் (ப்ரோக்ஷனம் செய்தல்) மந்திரம் தெரியாதவர்கள் பகவான் நாமவை சொல்லலாம்.
வாயவ்யம் : பசுவின் பாத துளியை (மண்) உடலில் பூசிக்கொள்ளல் . பசுக்கள் செல்லும்போது தரயில் அதன் குழம்புகள் அழுத்தி எடுக்கும் போது அந்த மண்ணிலிருந்து பட்டுவரும் தூசு களை நம் உடம்பில் படும்படி செய்தல். அதற்கு கோ தூளி என்பர்.
திவ்யம் : சூரியன் இருக்கும்போது பெய்யும் மழையில் நனைதல் அதாவது வெயில் காலத்தில் வெயில் அடித்துக்கொண்டே இருக்கும்போது தீடீரென மழை பெய்யும்.. அதைத்தான் திவ்யம் என்பர்.அதில் நனைவது விசேஷம்.
இவையெல்லாம் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தண்ணீர் கிடைக்காத இடங்களில் யாவருக்கும் பொருந்தும்.
ஆனால் இவை விதியன்று; விதிவிலக்குகள் போல அரிதாகப் பயன்படுதுவது.
இதே போல தினமும் ஆடைகளைத் துவைத்துக் கட்டிக்கொண்டு கடவுளை ‘மடி’யாக வழிபடுவது இந்துக்களின் வழக்கம். அப்படித் துணியைத் துவைக்க முடியாத ஒரு நிலையில் –
குறிப்பாக நீண்ட தூர யாத்திரையின் போது – நாம் கட்டப்போகும் ஆடையை தோய்க்காவிட்டாலும் சூரியனுக்கு முன் “வஸ்த்ராய ஃப்ட்” என்று சொல்லி உதறிவிட்டுக் கட்டிக்கொள்ளலாம் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தினமும் ஸ்நானம் செய்யும் முன் இந்த ஸ்லோகத்தை சொல்லுவது விசேஷம்.
” கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு”
என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும்.
நம்முடைய இந்து தர்மத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை நாம் செய்யவேண்டியது, கூடாதது, என எல்லா விஷயங்களையும் காரண கார்யத்துடன் சொல்லப்பட்டுள்ளது.
நாம் நவீன காலத்தில் இருந்தாலும்.நம் ஹிந்து பாரம்பரிய கலாச்சாரத்தை பின் பற்றி அது எல்லாவற்றிலும் மேலானது, முதன்மையானது என உணர்த்தும் விதமாக நடப்போமாக………
லோகா சமஸ்தா சிகினோ
பவந்து ………..
……. ஸ்ரீ
.
.