இன்று நாம் அறிந்து கொள்ளப் போவது :
” கருடாழ்வார் ”
நமது புராணங்களில் கருடாழ்வார் கடவுளாகவும் பெருமாளின் வாகனமாகவும்,கொடியாகவும் வணங்கப்படுகிறார்.
கருடன் வெற்றிக்கு அறிகுறியா இருப்பதால் நீ கொடியாகவும் விளங்குவாய் என பெருமாள் வரம் கொடுத்தார். அதனால் தான் பெருமாள் கோவில்களில் கொடி மரத்தை துவஜஸதம்பம் என்றும் கருடஸ்தம்பம் எனவும் சொல்வர்.
இவருக்கு வேறு பெயரும் உண்டு. இவரை பெரிய திருவடி என்றும்
அழைப்பர்.
தன் பக்தன் பிரஹ்லாதனுக்காக ஹிரன்யகசிபுவை அழிக்க நரசிம்மரா் அவதாரம் எடுத்தார்.
கருட வாகனத்தில் வராததால் வருந்திய கருடன் அந்த அவதாரத்தை காண வேண்டினர்.
பெருமாளின் ஆணைப்படி அஹோபிலத்தில் தவம் இருந்தார். மலைக்குகைக்குள் உகிர நரசிம்மர் ருபதில் காட்சி அளித்தார்.
மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவயே பெரிது என சரணாகதி அடைந்ததால் கருடன் கருடாழ்வார் என போற்றப்படுகிறார்.
இன்றும் கருடன் பறவை, கோவில் கும்பாபிஷேகம் சமயத்தில் வானத்தில் வட்டமிடுவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. சபரி மலையில் திருவாபரண பெட்டி வரும்போது கருடன் மேலே வட்டமிடுவதும் உண்மை சம்பவம்.
கருட வாகனம் :
கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார்.
முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன உடலில் அஷ்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார் பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாரு இருப்பார்.
கருட சேவை:
பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை . பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.
கருடன் காயத்திரி .
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத் .
கீழ்க்காணும் கருட மாலா மந்திரத்தை ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் உபதேசமாகப் பெற்றுத்தான் பல சித்திகளைப் பெற்றாராம்.
கருட மாலா மந்திரம்
ஓம் நமோ பகவதே, கருடாய
காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிஹ்வாய
பாதய பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹன ஹன
தஹ தஹ பத பத ஹூம்பட் ஸ்வாகா…….
பெருமாளின் சேவையே பெரிது என நினைத்த அந்த கருடாழ்வார் காயத்ரி மந்திரத்தையும் கருட மாலா மந்திரத்தைப் பாராயணம் செய்து
ஸர்வ வளங்களையும் பெற்று வாழ்வோமாக ! ……..
லோகா சமஸ்தா சுகினோ
பவந்து ………..
…… ஸ்ரீ