தேங்காய் உடைப்பதின் ரகசியம்

தேங்காய் உடைப்பதின் ரகசியம்

தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.

அதுபோல் நம் மனதில் குடிகொண்டிருக்கும் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது தான் வெண்மையான மனமும், அதிலிருந்துஉருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும்.

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்திற்கும் பூஜை பொருட்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும். ஆனால் மற்ற பழங்களின் விதையை போல் அது முளைக்காது.

அதைப் போலவே நாமும், எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என இறைவனின் அருள் பெறவே வாழைப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.


ஆலயத்தில் அற்புதம் :

வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் ஒரே கருவறையில் அருள்கின்றனர்.

ஆந்திராவில் உள்ள மங்களகிரி பானக நரசிம்மருக்கு நாம் எவ்வளவு பானகம் நிவேதனம் செய்தாலும், அந்தப் பானக அளவில் பாதியை விழுங்கி, மீதியை பிரசாதமாக நிறுத்திவிடுகிறார். இனிப்பான பானகம் எத்தனையோ லிட்டர் கொண்டு சேர்த்தாலும் அத்தலத்தில் ஈ எறும்பு இல்லாதது அற்புதம்.

சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி ஆலய பிராகாரத்தில் கடம்பவன தட்சிணாமூர்த்தி ரூபிணி எனும் பெயரில் பெண் வடிவ தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

……….ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: