காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக பொன்மொழிகள்,
1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார்
2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர் வித்வான்தான்
3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் – வித்வான். சாஸ்திரம் அஞுபவிப்பவர் – ஞானி சாஸ்திரம் உபதேசம் செய்பவர் – பிரசாரகர்
4) முதலில் அழகாகத் தோன்யதுதான் அப்புறம் உபத்திரமாக போகிறது
5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்
6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான் பக்தி
7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே உண்மை – அதுவே சத்தியம்
8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி
9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது.
10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும்
11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது பிராணாயமம் , தியானம் நிஷ்னம் – இதை சொல்வது யோக பாதம்
12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்,
13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து விட்டால் ஆசைக்கு இடமில்லை,
14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா சேமமும் கிடைக்கும்.
15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர்
16) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்.
17) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும் செத்த நாளே
18) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்.
19) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்.
20) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அழவேது?
21, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும், கோபமும்.
22. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.
23. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி, மற்றொன்று விநயம் ,
24. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால் மேன்மை தரும்.
25. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை செய்தல் வேண்டும்.
26. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் – ஞான தானம்.
27.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே பிரயோசனம்
28. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது,
29. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம் இருக்கிறது.
30. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.
31, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம்
32. “தான்” என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம் .
33. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லியிருக்கிறார்.
34. வியாதியை போக்க – வைத்தியன். யாசகம் வாங்க – பணக்காரன். துக்கம், பிறவிப்பிணி நீக்க – பரமேஸ்வரன்
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ