இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :
” மாவிலை மகிமை”
வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுபகாரியங்கள் ஆகட்டும் இல்லை கோவில் திருவிழாவாகட்டும் மாவிலை தோரணம் இல்லாத ஒரு விழாவை பார்க்கவே முடியாது. எதற்காக மாவிலைக்கு இத்தகைய முக்கியத்துவம் தருகிறோம்? வாருங்கள் பார்ப்போம்.
பூஜைகள் செய்யும்போது கலசத்தின் மேல் பகுதியில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் சொருகி அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள்.
பூஜை முடிந்த பின்னர் மாவிலையால் கலசத்தில் உள்ள தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளிப்பர். இப்படி விழாக்களில் மாவிலை முக்கிய இடம் பெறுவதற்கு காரணம் மாவிலையில் லட்சுமி தேவி வசிக்கிறார்.
விசேஷ நாட்களில் வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவதால் தீய சக்திகள் விலகுகிறது. அதோடு மாவிலை தோரணம் உள்ள வீட்டை பார்க்கும் தேவர்கள், அந்த வீட்டிற்குள் நுழைய முடிவு செய்வார்கள். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிஷ்டம் பிறக்கும் அதோடு வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அவற்றை இந்த தோரணம் நீங்க செய்யும்.
மாமரம் எல்லா நிலைகளிலும் நமக்கு நன்மையும் பலனையும் தருகிறது.
மாவிலை. எல்லா விசேஷங்களிலும் பயன்படும்.
காய்ந்த மாவிலையை தீயிட்டு கருக்கி சாம்பலை உபயோகிக்கலாம்.
மாங்காய் உணவுக்கு பயன்படுகிறது
மாம்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முக்கனிகளில் முதன்மையானது ” மா”.
மாவிலை பயன்கள்
– லக்ஷ்மி கடாக்ஷம்
– எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்
– நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்
– தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்
– மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது.
– பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது.
மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை
இத்தகைய சிறப்பு வாய்ந்த மாவிலையை நாம் பிளாஸ்டிக்கில் வாங்கி தோரணமாய் கட்டாமல். உண்மையான மாவிலை தோரணத்தை கட்டுவோம். வாழ்வில் வளமும் நலமும் பெறுவோமாக ……!
லோகா சமஸ்தா சுகினோ
பவந்து ……
…….. ஸ்ரீ