அபிராமி அந்தாதி #4

 

மனிதரும் தேவரும் மாயா

முனிவரும் வந்து

சென்னி குனிதரும் ேவடிக்

கோமளமே கொன்றைவார் சடை மேல்

பனி தரும் திங்களும் பாம்பும்

 பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி

 என்னாளும் பொருந்துகவே

மாயாமரணம் இல்லாத, சென்னிதலை, குனிதரும்வளைக்கும் வார்சடை நீண்ட சடை, பகீரதிபாகீரதி (நதி) என்றதன் சுருக்கம். பொருந்துகவே என்றால் வந்து அமைந்து எழுந்தருள வேண்டும்.

அபிராமி பட்டர் அன்னையினுடைய அருள் காட்சியிலே நனைந்து அறிந்து கொண்ட ரகசியம். அவளுடைய பாதார விந்தங்களை சரணடைவோருக்கு அவள் நல்வழியை காண்பிப்பாள். நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வாள். அவர்களுக்கு மறுபிறவி கிடையாது, அன்னையோடு அருளோடு கலந்து விடுவார்கள், என்ற அந்த ஒரு ரகசியத்தை அவள் காண்பித்த அவளுடைய உருவத்தில் தெரிந்த அபய ஹஸ்த முத்திரை கண்டு அதை உணர்ந்தார். அவருக்கு அதை அவள் உணர்வித்தாள்.

அம்பாளின் பாதார விந்தங்களை சிக்கெனப் பிடித்துக் கொண்ட அபிராமி பட்டருக்கு மனதில் சிறிது பயம் வந்துவிட்டது. நாமோ மனிதப் பிறவி. ஏதாவது ஒரு நேரத்தில் நம்முடைய சிந்தனையில் சிறிதளவு களங்கம் ஏற்பட்டாலும் தடுமாற்றம் ஏற்பட்டாலும், அன்னையினுடைய அருள் கடாட்சத்தை இழந்து விடுவோமோ என்று சதாசர்வ காலமும், தனக்கு கிடைத்த அந்த சொத்தை, இந்த கடாட்சத்தை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்ற கவலை வந்துவிட்டது. இந்த சொத்தை காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அப்போது அவரது சிந்தனையிலே உதித்த தெளிவு தான் மேலே நாம் கண்ட அற்புதமான அந்த செய்யுள்.

சதா சர்வ காலம் தங்களுடைய மனதை ஒருமைப்படுத்தி தவத்தில் ஈடுபட்டு இருக்கின்ற முனிவர்களுக்கு அவள் மிகவும் அருகில் இருக்கிறாள். நல்ல புண்ணிய காரியங்கள் பல செய்து அவளுடைய கிருபை கிடைத்துவிட்டதால் தேவர்கள், அடுத்த நிலையிலே அவள் அருகில் இருக்கிறார்கள். எந்தவிதமான தவத்திலோ, புண்ணிய காரியங்களிலோ, ஈடுபடாத பாமரனாகிய நான் எந்த விதத்தில் அவளுக்கு மிக அருகாமையில் இருக்க முடியும். அவளுடைய கருணை எனக்கு எப்படி கிடைத்துக் கொண்டே இருக்க முடியும் என்ற சிந்தனை வந்து கொண்டே இருந்தது.அதற்கு உண்டான விடை என்ன என்று யோசிக்க ஆரம்பித்தபோது அன்னையே அவருக்கு வழி காட்டி உள்ளாள். அதுதான், கொன்றை மாலை அணிந்த நீண்ட சடைமுடி மேல் பனிதரும் திங்களையும், அதாவது சந்திரனையும், பாம்பையும், பகீரதி என்ற பாகீரதியை தன் தலை மேல் கொண்ட அந்த சிவபெருமான் ஆகிய புனிதரும், என்னுடைய தாயும் ஆகிய நீயும் சதா சர்வ காலத்திலும் என் உள்ளத்தே வந்து இணைந்து எழுந்தருள வேண்டும் என்று தன்னுடைய கோரிக்கையை வைக்கிறார்.

நாம் இங்கே யோசிக்கின்ற பொழுது, இதற்கு முந்தைய செய்யுளில் அன்னையினுடைய திருவடி சரணம் என்று சொன்னவர், அடுத்த பாடலிலே சிவபெருமானுடன் சேர்ந்து என் உள்ளே என் சிந்தையில் நீ அமர்ந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் ஏன் என்று கேள்வி எழும்புகிறது? அதனுடைய காரணத்தை சிந்தித்தோமானால்,அம்மையை மட்டும் நம் உள்ளத்திலே நிறுத்தி அமர வைத்து விட்டோம் என்றால் அடிக்கடி எம்பெருமான் அவரை கூப்பிட்டுக் கொண்டே இருப்பான்.அவருக்கு சேவை செய்ய அவளும் சென்று விடுவாள்

.அப்பொழுது நம்மை மறந்து விடுவாளோ என்ற ஒரு எண்ணத்தினால் அவரையும் சேர்த்து இருவருமாக வந்து என்னுள்ளே என் சிந்தை உள்ளே அமர்ந்து விடுங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார் அபிராமி பட்டர் .பித்தரா, அவர் முக்காலமும் உணர்ந்த மாமுனிவர், மிகப்பெரிய சித்தர். சுருக்கமான கருத்து அன்னையினுடைய பாதார விந்தங்களை மட்டும் நாம் பற்றிக் கொண்டால் பத்தாது, சதா சர்வ காலமும் நம் சிந்தையிலே அந்த அம்மையும் எம்பெருமானும் உறைய வேண்டும். அதுவே முக்தி அடைவதற்கான சரியான வழி என்று கூறுகிறார். அன்னையின் அருள் கடாட்சம் எல்லோருக்கும் சித்திக்கட்டும்.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: